தொடர்ந்து மாணவிகள் நிருபர்களிடம் பேட்டியளித்தனர். அப்போது கூறுகையில், சுசீந்திரம் அரசு விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில் புழு பூச்சிகள் இருப்பதாகவும், அதேபோல கழிவறை தங்கும் இடங்களை சுத்தம் யாரும் செய்வதில்லை எனவும், மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை பாதி பொருள்களை வெளியில் எடுத்து செல்கின்றனர் எனவும் தெரிவித்தனர்.
மேலும், இதுகுறித்து முறையிடும்போது விடுதி காப்பாளனி, சமையலர், இரவு விடுதி கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து தொடர்ந்து புகார் தெரிவித்த போதும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனையுடன் கூறினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை கொடுத்தனர்.