குறிப்பாக கடற்கரை கிராமங்கள் தோறும் தினமும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (30-ம் தேதி) காலை 11 மணியளவில் நீரோடி கடற்கரை கிராமத்தில் உள்ள ஆலய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆலய அருட்பணியாளர் கிளிட்டஸ் தலைமை வகித்தார். மற்றும் ஆலய நிர்வாகிகள், விசைப்படகு சங்க நிர்வாகிகள் குடும்பமாக ஆண்கள் பெண்கள் என ஏராளம் பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சர்வதேச மீனவர் அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டனி சிறப்புரையாற்றினார். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.