நிகழ்ச்சியில் குமரி மாவட்ட மீன் விவசாயிகள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க சேர்மனும், தமிழக பா. ஜ. க மீனவர் பிரிவு மாநில செயலாளர் & பெருங்கோட்ட பொறுப்பாளரும், அகில இந்திய மீனவர் மக்கள் வளர்ச்சி இயக்கத்தின் நிறுவனர் - தலைவருமான E. S. சகாயம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழியாக வழங்கப்படும் வள்ளங்களுக்கான மானிய மண்ணெண்ணெய், மானிய என்ஜின் பெறுவது குறித்தும், 𝗣𝗠𝗠𝗦𝗬 திட்டத்தின் கீழ் ரூபாய் 2 லட்சம் மானியத்துடன் கூடிய மானிய வள்ளங்கள் பெறுவது தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டத்தில் அமைப்பின் இனயம் கடலோர மீனவ கிராம மாவட்ட மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.