கேரள மாநிலம் எடத்துவாவில் உள்ள புனித ஜார்ஜியார் திருத்தலத்தில், தமிழக மக்களுக்காக முதல் 10 நாட்கள் சிறப்பு விழா கொண்டாடப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக தொடரும் இந்த பாரம்பரிய விழாவில், நேற்று சப்பர பவனியுடன் பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த திருத்தலத்திற்கும் தமிழகத்திற்கும் நீண்டகால தொடர்பு உள்ளது.