மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா், மாணவிகள், மழையால் சிரமம் அடைந்தனா். தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக சுருளோடு பகுதியில் 56. 20 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. மழை நீடிப்பதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் தற்போது 44. 53 அடியாக உள்ளது. இந்த அணை 45 அடியை எட்டும்போது, அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்படும்.
மேலும், கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு , வள்ளியாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், அணைகளிலிருந்து உபரிநீா் எந்த திறக்கப்பட்டதால் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.