கொட்டாரத்தில் அதிகபட்சமாக 103. 4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குருந்தன்கோடு, நாகர்கோவிலிலும் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையில் மீண்டும் மழை தொடர்ந்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. விடிய விடிய கொட்டி தீர்த்த மழையின் காரணமாக சானல்களிலும், ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருகிறது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் மீதமுள்ள குளங்கள் நிரம்பி வருகிறது.