தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குளச்சல் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தூத்துக்குடி மாவட்டம் குளத்தூருக்கும், மண்டைக்காடு இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா கல்லிடைக்குறிச்சிக்கும், அருமனை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வி. கே. புரத்திற்கும், ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் பத்மாவதி நெல்லைக்கும், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் ஏர்வாடிக்கும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்கள் தேர்தல் பணிகளை சீரமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.