காளிகேசத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை.

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, அழகியபாண்டியபுரம் வனப்பகுதியில் உள்ள காளிகேசம் சூழல் சுற்றுலாத்தலம் தீ தடுப்பு பணிகளுக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து குமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி