கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக விட்டுவிட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் கடல் பகுதியில் சூறாவளி காற்று 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை முதல் குமரி மாவட்ட கடல் பகுதியில் கடல் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அலைகளின் சீற்றமும் அதிகரித்துள்ளது.