சுசீந்திரம்: நலத்துறை அலுவலகம் முன்பு போராட்டம்

முழு நேர ஊழியர்களாக இந்து அறநிலையத்துறை கோவில்களில் பணிபுரியும் பூசாரி, மேல்சாந்தி, கடைநிலை ஊழியர்கள் உட்பட முழு நேர பணியாளர்களுக்கு அரசுஆணை முழு சம்பளம் வழங்கிடாமல், சொற்ப சம்பளம் வழங்கி வருவதை கண்டித்தும் மேலும் அரசு ஆணையிட்டும், உயர்நீதிமன்றத்தில் உத்தரவிட்டும் முழுநேர நிரந்தர பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கிட ரூபாய் 13 கோடி கூடுதல் மானியம் அனுமதித்து அதை இன்னும் வழங்காமல் இருக்கும் குமரிமாவட்ட இந்து அறநிலையத்துறை திருக்கோவில்கள் நிர்வாகத்தை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகம் முன்பு குமரி மாவட்ட ஆலய ஊழியர் சங்கம் சார்பில் கோவில் பணிகளை புறக்கணித்து நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி