ஆரல்வாய்மொழியில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூராட்சி 9ஆவது வார்டுக்கு உட்பட்ட பாலாஜி நகர் பகுதியில் 20 வருடங்களாக வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி இயங்கி வரும் நிலையில், ஆரல்வாய்மொழி பேரூராட்சி நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான பணியை, இன்று (ஜூன் 4) பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வார்டு கவுன்சிலர்கள் மணி, ஏசு மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி