இரவிபுதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாம்.

கன்னியாகுமரி மாவட்டம் இரவி புதூர் அரசு உயர்நிலை பள்ளியில் இன்று (பிப். 7) குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தோவாளை ராஜலெட்சுமி நினைவு அறக்கட்டளை இணைந்து இலவச மருத்துவ முகாமினை நடத்தினர். இந்த முகாமை முன்னாள் அமைச்சர் மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய்சுந்தரம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஏராளமான மக்கள் இதில் கலந்துகொண்டு மருத்துவ உதவிகளைப் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி