கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை பகுதியை சேர்ந்த அய்யப்பன் (44), தம்பரான் கோயில் - முத்தாரம்மன் கோயிலில் அறங்காவலராக இருந்து வந்தார். அவர் கோயிலுக்கு சொந்தமான 45 பவுன் நகைகளில் 21 பவுன் நகைகளை திருடி அடகு வைத்தது தெரியவந்தது. இது குறித்து தற்போதைய அறங்காவலர் சேத்திரபாலன் அளித்த புகாரின் பேரில், போலீசார் அய்யப்பனை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.