தன்னுடன் டிவி நிகழ்ச்சியில் நடித்த நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில், கடந்த மே 22ம் தேதி கன்னட நடிகர் மதேனுார் மனுவை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் தரப்பட்ட புகாரின் பேரில் மதேனூர் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கைதான மதேனூர் ஜாமீனில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.