காஞ்சி: "பாலாற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு"

காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த மணி மகன் சிவா (35), மின்னணு தராசுகள் பழுது நீக்கும் தொழில் செய்து வந்தார். செவிலிமேடு பகுதியில் பாலாற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி மாயமானார். தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டனர். உயிரிழந்த சிவாவுக்கு இரு மகன்கள் உள்ளனர். சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி