பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது

வந்தவாசி அடுத்த கீழ்மேலூர் பகுதியைச் சேர்ந்த வினோத் மற்றும் எல்லம்மாள் தம்பதியினர், மரம் வெட்டும் தொழிலுக்காக காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திக்குன்றம் வந்துள்ளனர். நிறைமாத கர்ப்பிணியான எல்லம்மாளுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸில் நர்ஸ் அபிநயா உதவியுடன் பிரசவம் பார்த்ததில் பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி