கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஆலயத்தில் முன்பு யாக சாலை அமைக்கப்பட்டு, நேற்று, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹுதி, வாஸ்து சாந்தி, கும்பாலங்காரம், முதல்கால யாக பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து, இன்று, இரண்டாம் கால யாக சாலை பூஜைகள், நாடி சந்தனம், தத்வார்ச்சனை மகா பூர்ணாஹுதி, தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர், மங்கள வாத்தியங்கள் முழங்க யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு ஆலயத்தை சுற்றி வலம் வந்து விமான கோபுர கலசத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் சிவாச்சாரியார்கள் ஊற்றி தீபாராதனைகள் காண்பித்து கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர். அதைத்தொடர்ந்து, பக்தர்கள் மேல் புனித நீர் தெளித்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்ற சுப்ரியா சாகு ஐஏஎஸ்