வந்தவாசி: தாய்ப்பால் குடித்த குழந்தை மூச்சுத்திணறி பலி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மாதனூரைச் சேர்ந்த வினோத்-அனிதா தம்பதியினரின் 20 நாள் பெண் குழந்தை, கடந்த வெள்ளிக்கிழமை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி மயங்கியது. வந்தவாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வந்தவாசி வடக்கு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி