கல்லுாரி மாணவர்களை தாக்கிய இருவர் கைது

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில், டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த பொறியியல் கல்லூரி மாணவர்களான ஹரிகரன் (22) மற்றும் பார்வேந்தன் (21) ஆகியோரை, இரு வாலிபர்கள் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக, படூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (23) மற்றும் சபரி பிரியன் (19) ஆகிய இருவரை கேளம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் மாணவர்களுக்கு முகம் மற்றும் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி