காஞ்சி மாவட்டம் திருப்புலிவனம் கிராம ஊராட்சியில் உள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை மற்றும் கூழ்வார்த்தல் நிகழ்வு பிப்ரவரி 22, 2026 அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் அம்பாளுக்கு பூ கரகம் எடுத்து, பட்டு வஸ்திரம் அணிவித்து, மலர் அர்ச்சனைகள், அலங்காரங்கள், கீர்த்தனைகள், அம்மன் பாடல்கள் பாடி ஆராதனைகள் நடத்தப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.