ராவத்த நல்லூர் ஊராட்சியில் மாற்றுத்திறனாளி சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டத்திற்குட்பட்ட இராவத்தநல்லூர் ஊராட்சியில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் - 2026 முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், மாற்றுத்திறனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் திரு. பு. விஜயகுமார் அவர்களிடம் வழங்கினர். இது மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் தங்களை எளிதாக இணைத்துக் கொள்ள உதவும் ஒரு சிறப்பு முயற்சியாகும்.

தொடர்புடைய செய்தி