உத்திரமேரூர் தாலுகாவிற்குட்பட்ட சிலாம்பாக்கம் கிராமத்தில், செய்யாற்றின் குறுக்கே 35 கோடி ரூபாய் செலவில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய அணைக்கட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. 480 மீட்டர் நீளமும் 1.8 மீட்டர் உயரமும் கொண்ட இந்த அணைக்கட்டு பணிகள் 2023ல் தொடங்கி மூன்று ஆண்டுகளாக நடைபெற்றன. பள்ளம் தோண்டும்போது அதிகளவு தண்ணீர் வந்ததாலும், கடந்த ஆண்டு பருவமழை காரணமாகவும் பணிகள் தாமதமாயின. அணைக்கட்டுக்கு அடித்தளம், சுவர்கள் மற்றும் ஷட்டர் பொருத்தும் பணிகள் அனைத்தும் கடந்த நவம்பரில் முடிவடைந்துள்ளன.