இந்த நீதிமன்றங்களில் தேங்கியுள்ள மற்றும் பதிவு செய்யப்படாத வழக்குகளை சமரசமாக முடிக்க, தேசிய மக்கள் நீதிமன்றம் முடிவெடுத்தது.
இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாற்றுமுறை தீர்வு மைய வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா அறிவுறுத்தலின்படி, தேசிய மக்கள் நீதிமன்றம், கடந்த 14ம் தேதி நடந்தது. இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி காயத்ரி, மகிளா நீதிபதி தமிழரசி, நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் மோகனகுமாரி, முதன்மை சார்பு நீதிபதி பாஸ்கர் உள்ளிட்ட நீதிபதிகள் முன்னிலையில், வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
மாவட்டங்களில், அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில், குடும்ப நல வழக்குகள், குற்ற வழக்குகள் மற்றும் வங்கி வழக்குகள் என, 7, 997 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன. இதில், 4, 066 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 34 கோடியே 17 லட்சத்து 49 ஆயிரத்து 567 ரூபாய், வழக்கு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள் பங்கேற்றனர்.