காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரிச்சர்ட் முடிவு பத்திரிகை செய்திக்கு தாமதம்.

இன்று தமிழகம் முழுவதும் 10வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. தேர்வு முடிவுகள் வெளியாகி சற்று நேரத்திலேயே பல்வேறு மாவட்டங்களில் மாணக்கர்களின் தேர்ச்சி சதவிகீதம் மற்றும் விவரங்கள் அடங்கிய பத்திரிக்கை அறிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் 2மணி நேரம் கடந்தும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது வரை மாவட்ட பள்ளி கல்வித்துறையானது எவ்வித தகவலும் சரி, பத்திரிக்கை செய்தியும் சரி வெளியிடவில்லை. இதில் இன்னும் சற்றும் நேரத்தில் 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கின்றன.

ஒரு வேளை இரண்டும் சேர்த்து வெளியிடப்படுமோ?

இதே நிலை தான் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிய போதும் என்பது குறிப்பிடதக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி