இந்த ஊராட்சியில், நான்கு மற்றும் ஐந்தாவது வார்டுகளில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, 30, 000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
இத்தொட்டிக்கு நீரேற்ற, குடிநீர் ஆதாரம் இல்லை. எனவே, இப்பகுதி மக்களுக்கு புதிய குடிநீர் கிணறு அமைக்க வேண்டும்.
அதேபோல், இப்பகுதியில் வசிக்கும், 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, வீட்டு மனை பட்டா இல்லை. எனவே, இக்குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
அதேபோல், ஒன்று மற்றும் இரண்டாவது வார்டு பகுதி மக்கள், ரேஷன் பொருட்களை வாங்க, 1 கி. மீ. , துாரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி, இங்கு பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக, அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.