பூங்காவிற்கான அனைத்து பணிகளும் முழுமை பெறாமல், அவசர கோலத்தில் திறக்கப்பட்டதால், பூங்காவில் பொருத்தப்பட்டுள்ள எல். இ. டி. , மின் விளக்குகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.
இதனால், பொதுமக்கள் இரவு நேரங்களில் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, பூங்காவின் உட்புறத்தில் கூடுதல் மின் விளக்குகள் அமைத்து, மின் இணைப்பு வழங்க, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.