இதனால், ஊராட்சி சேவை மையக் கட்டடத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்கான பயிற்சி, கூட்டங்கள் நடத்த போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. மேலும், ஊராட்சி சேவை மையக் கட்டட படிக்கட்டுகளில் ஏறி, ரேஷன் பொருட்கள் வாங்க, முதியவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, ரேஷன் கடைக்கு சொந்தமாக புதிய கட்டடம் கட்ட, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: அரும்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில், நான்கு ஆண்டுகளாக ரேஷன் கடை ஊராட்சி சேவை மையக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. அப்பகுதியில் ரேஷன் கடைக்குப் புதிதாகக் கட்டடம் கட்ட, ஊராட்சி மன்றம் சார்பில் தீர்மானம் இயற்றப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.