பட்டாசு கடை உரிமம் பெற அக். 15க்குள் விண்ணப்பிக்கலாம்.. ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு கடைகள் அமைக்க விருப்பமுள்ளவர்கள் தற்காலிக உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் உரிமம் பெற கடை அமையும் இடத்தின் வரைபடம், கட்டட உரிமத்தின் ஆவணம், உரிமத்திற்கான கட்டணம் கட்டிய அசல் ரசீது ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதனுடன், ஏதேனும் ஒரு வசிப்பிட ஆதார சான்று, வரி ரசீது, 2 புகைப்படம் ஆகிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும். இ- சேவை மையங்கள் வாயிலாக இணையவழியில் வரும் அக். 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பின் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் வாயிலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால் தற்காலிக உரிமத்தின் உத்தரவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி