செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் செங்கல்பட்டு நகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. அங்கு திடீரென எதிர்பாராத விதமாக தீப்பற்றியது இதனால் குப்பை முழுவதும் தீ பரவி மல மலவென கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால் அப்பகுதி முழுவதுமே புகைமூட்டமாக காட்சியளித்தது இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சுமார் 300 மீட்டர் வரை இந்த புகை சுற்றி பறந்து காணப்படுவதால் இதை கடந்து செல்லும் போது சில நபர்களுக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டது.
எதிர்பாராத விதமாக தீப்பற்றியதா அல்லது மர்ம நபர்கள் யாராவது தீயிட்டு குப்பையை கொலுத்தினார்களா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது.? அதேபோல் நகராட்சி நிர்வாகம் இங்கு எதற்காக குப்பைகளை அதிக அளவில் கொட்டியுள்ளது எனவே போர்க்கால அடிப்படையில் குப்பைகளை அகற்ற வேண்டும் எனவும் இனிவரும் காலங்களில் இதுபோல் தீ விபத்து ஏற்படாத வண்ணம் தவிர்க்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.