வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், முனீஷ்வரனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 60,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி பிரியா, நேற்று தீர்ப்பளித்தார். பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட விபரங்கள் மற்றும் புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என, மாவட்ட காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. சைபர் கிரைம் பற்றிய புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற வளைதளத்தில் தங்கள் புகார்களை பதிவிட வேண்டும். சைபர் குற்றவாளிகள் வாயிலாக ஏற்பட்ட நிதி இழப்புகளுக்கு 1930 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என, சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் காவலர்களின் தடியடியை நியாயப்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம்