ஆனால், மேற்கொண்டு எந்த முன்னேற்றமும் இல்லாமல், சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தற்போது வரை சாலைப் பணி துவங்கப்படாத நிலையில், தோண்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட் கழிவுகளும் அகற்றப்படாமல் உள்ளன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குழந்தைகள் மற்றும் முதியவர்கள், கான்கிரீட் கழிவுகள் மீது நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கரிகந்தாங்கல் சிமென்ட் சாலைப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு