காஞ்சி: சிறுவனின் உயிரை பறித்த ஊஞ்சல்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில், 12 வயது சிறுவன் அனில்குமார் வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது கழுத்து இறுக்கி உயிரிழந்தான். அக்கம் பக்கத்தினர் அவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி