காஞ்சி: குண்டும் குழியுமான சாலை

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் உள்ள வெங்காடு ஊராட்சி மக்களின் முக்கிய சாலையானது, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களால் சாலை சேதமடைந்துள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி, விபத்துக்களுக்கும் வழிவகுக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், வெங்காடு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி