இதில் சிறப்பு அழைப்பாளராக வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் கணேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவியருக்கு கல்வி உபகரண பொருட்களுடன் ஊக்கத்தொகையினை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசியவர் ஏழை எளிய மக்களின் கல்வி வளர்ச்சிக்காக வேல்ஸ் பல்கலைக்கழகம் பல்வேறு சேவைகளை செய்து வருவதாகவும் கோவளத்தில் உள்ள எஸ் டி எஸ் பவுண்டேஷன் மேற்படிப்பு படிக்க வசதி இல்லாத மாணவ மாணவியர்களுக்கு எஸ் டி எஸ் பவுண்டேஷன் ஒருங்கிணைத்து அவர்களை தேர்ந்தெடுத்து கொடுத்தால் அவர்கள் விரும்பும் பாடப் பிரிவை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம் என வாக்குறுதி அளித்தார். தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரிக்கு செல்லும் 225 மாணவ மாணவியருக்கு தலா 5 ஆயிரம் ஊக்கத்தொகையினை எஸ் டி எஸ் பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்டது.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது