செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்தில் அதிமுக நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கிளியாநகர் ஊராட்சியில் நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட
கிளியாநகர் மற்றும் ஓட்டக்கோயில் ஊராட்சிகளில் அதிமுக நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வானது வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட கிளியாநகர், ஓட்டக்கோயில்,
உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை கிளை வாரியாக சரிபார்த்து
அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் செ. விவேகானந்தன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல், கலந்துகொண்டு கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி கட்சி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கினர்.