இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக அமைப்பு தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து நேற்று, ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: விமான நிலையத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய கிராமத்தினர், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தினால், எங்கள் கட்சியினர் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?