செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் பள்ளி அருகில் கஞ்சா விற்றவர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், ஒற்றைவாடைத் தெருவைச் சேர்ந்தவர் செவன் அப் மோகன் என்ற மோகன்(40). பூஞ்சேரி பகுதியில் உள்ள மாமல்லபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், இவர் கஞ்சா விற்பதாக, மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் அந்த இடத்திற்கு சென்ற போலீசார், பள்ளிக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்த மோகனை கைது செய்து, அவரிடமிருந்து தலா 15 கிராம் கொண்ட 10 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி