இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் தொழில்நுட்ப கொள்கை நிபுணர் டாக்டர் அனந்தபத்மநாபன், செங்கல்பட்டு மாவட்ட சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் தீபா, த்ரேசா, மேரிசெலின், கலையரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாமர மக்களும் சட்ட நடைமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்களுக்கான சட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
முகாமில் மகளிருக்கான சொத்துப் பெறுவது குறித்தும், விபத்து ஏற்பட்டிருப்பின் அதற்குண்டான நஷ்ட ஈடு பெறுவது அதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் பல்வேறு தேவைகளை பொதுமக்கள் வழக்கறிஞர்களிடம் கேட்டு அறிந்துகொண்டனர். நிகழ்வில் சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் கிருஷ்ணகிஷோர், பட்டாலா ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பூர்ணிமா சண்முகசுந்தரம், வார்டு உறுப்பினர்கள், சட்டக் கல்லூரி மாணவ மாணவியர் என பலர் கலந்துகொண்டனர்.