கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று, வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.வேளாண் துறை, தோட்டக்கலை, மின்வாரியம், வருவாய் துறை, கூட்டுறவு, கால்நடை என, வேளாண் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை நேரடியாகவும், மனுவாகவும் தெரிவிக்கலாம்.
எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண்மை தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.