மதுராந்தகம்: மின்சாரம் பாய்ந்து கிணற்றில் விழுந்த விவசாயி பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கழனிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன் (39) நேற்று முன்தினம் (மே 27) காலை வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும்போது மின் மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து கிணற்றில் விழுந்ததில் உயிரிழந்தார். தீயணைப்புத் துறையினர் சடலத்தை மீட்டனர். மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி