மகேந்திராசிட்டி அருகே வேன் மோதி முதியவர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திராசிட்டி பகுதி திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது சென்னை நோக்கி சென்ற வேன் மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலி. செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் பகுதியை சேர்ந்த சுப்ரமணியநாயக்கர் என்பவரது மகன் கோவிந்தசாமி (78) என்பவர் அஞ்சூரிலிருந்து தனது மகளை பார்ப்பதற்காக மகேந்திராசிட்டி எதிரே பகத்சிங் நகரில் வசித்து வரும் மகள் வீட்டுக்கு நடந்து வந்துள்ளார். 

நடந்து வந்த முதியவர் கோவிந்தசாமி மகேந்திராசிட்டி சீரோ பாயின்ட் சாலை பகுதியை கடக்கும் போது விழுப்புரம் கோணாதிகுப்பம் பகுதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் சென்னை வியாசர்பாடி நோக்கி அதிவேகமாக வந்த வேன் முதியவர் மீது மோதி பலத்த காயமடைந்த முதியவர் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

 அருகில் இருந்த போக்குவரத்து போலீசார் தாம்பரம் போக்குவரத்து மற்றும் புலனாய்வு போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி