இதனால் ஆத்திரமடைந்த பாபு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது தன்னுடன் கையில் எடுத்து வந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் பாபுவின் உடல் முழுவதும் தீக்காயம் பரவிய நிலையில் அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து 70 சதவீத தீக்காயங்களுடன் பாபு விற்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் பாபுவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.