எனவே, சேதமடைந்திருந்த பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிய பயணியர் நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து, புதிய பயணியர் நிழற்குடை அமைக்க, 2025 - 26ம் நிதி ஆண்டில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், 6.32 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, உத்திரமேரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., வாக சுந்தர் உள்ளார்.
புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "கிளக்காடி கிராமத்தில் புதிய நிழற்குடை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. இந்த பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் பயணியர் நிழற்குடை பயன்பாட்டுக்கு வரும்" என்றார்.