இதில் சிறப்பு விருந்தினராக குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றிவைத்தும் மருந்தகத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கூட்டுறவுத்துறை சார்பில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விவசாய கடன், கால்நடை பராமரிப்பு கடன், மகளிர் சுயஉதவிக் கடன், சிறுவணிக கடன், கல்விக்கடன் ஆகியவற்றிற்கான காசோலையை பயனாளிகளுக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மத்திய அரசு கல்விக்கடனை தமிழகத்திற்கு தராமல் வஞ்சித்து வருவதால் திருப்போரூர் அடுத்த இள்ளலூர் பகுதியைச் சேர்ந்த அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சரண்யா என்ற மாணவி தான் சேர்த்து வைத்திருந்த சிறுசேமிப்புத் தொகை ரூபாய் 12 ஆயிரத்துக்கான காசோலையை தமிழக அரசின் கல்விச் செலவிற்காக வழங்கினார். அந்த மாணவிக்கு அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து பாராட்டினர்.