சென்னையில் கே.கே. நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், வியாசர்பாடியைச் சேர்ந்த கார்த்திகா தேவி மற்றும் ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த சுந்தரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், அங்கிருந்த இரு பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.