சென்னை: ஆருத்ரா கோல்டு; 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, காஞ்சிபுரம், வேலூரில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்குச் சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிக வட்டி தருவதாகக் கூறி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் சுமார் 2,438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு விசாரித்து வரும் நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகக் கூறி இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இயக்குநர்களில் ஒருவரான மோகன்பாபு வீட்டிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

தொடர்புடைய செய்தி