மின்கம்பம் மீது கார் மோதி விபத்து: 3 பேர் காயம்

செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற கார், வாலாஜாபாத் சாலை, கீழாண்டை ராஜவீதி பகுதியில் நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் முன்பக்க கண்ணாடி மற்றும் மேல்பகுதி சேதமடைந்தது. காரில் பயணித்த மூன்று பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்தால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மின் ஊழியர்கள் சேதமடைந்த கம்பம் மற்றும் மின்கம்பிகளை சீரமைத்தனர்.

தொடர்புடைய செய்தி