மதுராந்தகத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேரடி வீதி பகுதியில் கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து செங்கல்பட்டு தெற்க்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி மாநில துணை தலைவர் சங்கீதா மதிவாணன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். செங்கல்பட்டு பாஜக தெற்க்கு மாவட்ட தலைவர் பிரவீன் குமார், மற்றும் பாஜவை சேர்ந்த மகளிர் அணியினர், பாஜகவினர் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி