செங்கல்பட்டு நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பில், இன்ஸ்பெக்டர் தேவிகா தலைமையில் புழுதிவாக்கம் பகுதியில் நேற்று பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தை திருமணம், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து காப்பது, போதைப்பொருட்கள் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.