அப்போது, மதுராந்தகம் அடுத்த அத்திமனம் பகுதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வடமாநில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளனர். அவர்கள் மீது ஆம்புலன்ஸ் மோதாமல் இருக்க, ஓட்டுனர் திடீரென 'பிரேக்' பிடித்துள்ளார். இதில் ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி, சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், ஆம்புலன்சில் பயணம் செய்த குட்டியின் மனைவி தேவி, மகன் இளங்கோ, உறவினர்கள் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனே, வேறு ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டு, உடலை தாம்பரத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த விபத்து குறித்து, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
காஞ்சிபுரம் நகரம்
வெத்தலை பாக்கு பழம் வைத்து அழைப்பிதழ் கொடுத்த நாம் தமிழர்